சளி தீர்க்கும் பாட்டி வைத்தியம்

சளி ஒரு பொதுவான நோய். அது பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு எப்போதும் மாடர்ன் மருந்தை சளிக்கு பரிந்துரைக்க மாட்டார்கள். நீங்கள் மருந்து எடுக்காவிடிலும் சளி ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்றே அவர்கள் கூறுவர். அலோபதி அல்லது ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், சளி முழுவதுமாக சரியாவதில்லை. அது நமது உடலுக்குள்ளேயே இருக்குமே தவிர நமது உடலைவிட்டு வெளியேறுவதில்லை. அது நம் உடலை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி சித்த மருத்துவமே.


இஞ்சி

10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.


திரிகடுகம் கசாயம்

30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

எலுமிச்சை

ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தேங்காய் எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று.

துளசி

தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.

ஆடாதொடை

ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.

கடுக்காய்

மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும்.

Google+ Linkedin Youtube