தமிழ்நாடு செய்திகள் | kumarinews

தமிழகத்தில் முதன்முறையாக 5,000-ஐ கடந்த தொற்று எண்ணிக்கை: 10,000-ஐ கடந்த மாவட்டங்களின் புள்ளிவிவரம்

தமிழகத்தில் முதன் முறையாக அதிக அளவில் 5849 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 பரிசோதனை

சென்னையில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இதில், இந்தியாவிலேயே சென்னை தான் முதல் இடம் ஆகும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல், காலை சிற்றுண்டித் திட்ட சர்ச்சை: முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிகள் இறுதி செய்யப்பட்டன என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 19-ம் இடத்தில் தமிழகம்; 4,965 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் புள்ளிவிவரம்

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை காட்சிக்கு வைக்க அகழ்வைப்பகம்

மதுரை மாவட்டத்திற்கு அருகில் கொந்தகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்கான அகழ் வைப்பகத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: ஊடக செய்திகள் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக விசாரணை

மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், கரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை நாளைக்கு விசாரிக்கிறது.

1.75 லட்சத்தை எட்டிய தமிழகம்; 4,807 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் புள்ளிவிவரம்

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,298 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது: மேலும் 2 பேர் உயிரிழப்பு

தென்காசியில் இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர் காலிப் பணியிடங்கள் விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்த இடத்தில் சென்னை; தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,157 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

10 நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் இன்னும் 10 நாட்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் கேட்டு வழக்கு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கக்கோரி தாக்கலான மனுவுக்கு மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துரை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதம், தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: புதிய விதிகளை வகுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

மதங்களை, தலைவர்களை அவதூறாக சமூக வலைதளங்களில் சித்தரித்து வெளியாகும் காணொலிகளைத் தடுக்கும் வகையில் அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றதில் முறையீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பல்கலை, கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,078 பேர் பாதிப்பு: 4,743 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.