27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும் தற்போது நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதே சமயம் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்த 34 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Google+ Linkedin Youtube