3 படங்களில் சூர்யா

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைபோற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது. தற்போது 3 படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவற்றில் ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் கொரோனாவால் முடங்கியது. ஓரிரு வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
ஞானவேல் இயக்கும், கூட்டத்தில் ஒருவன் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் சூர்யா படவேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது

Google+ Linkedin Youtube