தமிழக இளைஞருக்கு 36 இலட்சம் வழங்கிய மைக்ரோசஃப்ட்!!! அப்படி என்ன செய்தார் அவர்???

Bug-கை கண்டுபிடித்ததால் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் 36,33,277.50 ரூபாய் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகளில் பக் (BUG) கண்டுபிடித்ததற்காக சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கு 50,000 அமெரிக்கா டாலரை (தோராயமாக ரூ. 36 லட்சம்) வழங்கியுள்ளது அந்நிறுவனம்.
எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பது தான் அந்த பக் (BUG) அவர் சுட்டிக்காட்டிய பிரச்சனையை மதிப்பிட்ட பிறகு, மைக்ரோசாப்ட் பாதுகாப்புக் குழு இந்த பிரச்சினையை சரிசெய்தது. அவர்களின் அடையாள பக் பவுண்டி திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையாவுக்கு 50,000ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக அளித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இது தொடர்பாக முத்தையா தனது ப்ளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.
இது போல் ஏற்கனவே ஒரு முறை இவர் பரிசு வாங்கியவர். முன்னதாக ஃபேஸ்புக் மூலமாக இன்ஸ்டாகிராம் அக்கௌண்ட்டை ஹேக் செய்வதற்கான பக்-கையும் கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார். “மைக்ரோசாப்ட், பயனரின் கடவுச்சொல்லை மீட்டமைக்க ஒரேவகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தேன். எனவே அவற்றை சோதிக்க முடிவு செய்தேன்,” என்கிறார் முத்தையா

Google+ Linkedin Youtube