கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு

சென்னை, 
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையானது கடந்த மாதம் பெரும் உச்சத்தை எட்டியநிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறுகையில்,”கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்படும். தமிழக மக்கள் காவல்துறையின் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுள்ள மக்களாக இருக்க வேண்டும், அந்த விருப்பத்தை தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “காக்கும் அரசு, கட்டுப்படும் மக்கள், தடையில்லாத் தடுப்பூசி இந்த முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும்” என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்

Google+ Linkedin Youtube