தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என்னென்ன தளர்வுகள்

சென்னை, 
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதுபற்றி குறிப்பிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது முழு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். எனவே தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதிவரை (வரும் திங்கட்கிழமை) மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என உத்தரவிட்டார்.
தற்போது நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 24 ஆயிரமாக குறைந்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை எட்டியுள்ள கொரோனா பரவலை கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.
எனவே இந்த வேகத்தை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசிப்பதற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்கலாமா? என்று நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் சில மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பரவல் இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருப்பதும் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து  தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்- மைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வெளீயிட்டு உள்ளார். 
அதன் விவரம் வருமாறு:-
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது 
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது
11 மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் 
காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி
எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவுடன் அனுமதி
எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் இ.பதிவுடன் செயல்பட அனுமதி
எலக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
வாகனங்களில் உதிரிபாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்படும்
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு பயணிக்க இ.பாஸ் தேவை
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல இ.பாஸ் பெற்று பயணிக்க அனுமதி
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்
8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
ஏற்றுமதி ஆணை வைத்திருப்பின், 10% பணியாளர்களுடன் செயல்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி
நடமாடும் காய்கறி, பழ, மளிகை விற்பனை தொடரும்
நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை தொடர்ந்து செயல்படும்
பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்
பொருட்களை வாங்க, பைக், கார்களில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்
பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்

Google+ Linkedin Youtube