ஆந்திரா: மே 5 முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பு

ஆந்திரா: மே 5 முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, ஆந்திர மாநில அரசு மே 5 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, ஆந்திர மாநில அரசு மே 5 ஆம் தேதி முதல் 14 நாள்கள் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் காரணமாக அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். 144 தடை உத்தரவின்படி  நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டமாக சேரவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் இருந்து அவசரகால சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் கோவிட் -19 நிலைமை, தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நேற்று 18,972 பேர் புதிதாக கொரோனா பாதிப்புள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google+ Linkedin Youtube