தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தமிழகத்தில் இன்றும்,நாளையும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் என்பதால் நேற்றே மதுவாங்க ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் ஒரே நாளில் 292 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. தமிழகத்தில் அதிகளவாக சென்னை மண்டலத்தில் 63 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின.

இதற்கு அடுத்தபடியாக மதுரையில் 59 கோடி ரூபாய்க்கும், சேலம், திருச்சியில் தலா 56கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகின. மேலும் கோவையில் 56 கோடியே 37லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி நிலையில், தற்போது அதை விட 40கோடி ரூபாய் கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளது.

Google+ Linkedin Youtube