தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா தொற்று தற்போது இரட்டை இலக்கமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் கும்பகோணம் அன்னை கல்லூரியில் மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு 183ஆக உயர்ந்துள்ளது.

 தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் இடையே கொரோனா தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google+ Linkedin Youtube