நாட்டுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மடத்துக்குளம் வேட்பாளர் குமரேசன், உடுமலைப்பேட்டை வேட்பாளர் ஸ்ரீநிதி ஆகியோரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “மாற்றத்தின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். சாதாரணமானவர்கள் மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது. மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று கூறினார்.

மேலும், மாற்று அரசியல் வந்தால் தான் வாழ்க்கையின் தரம் மாறும் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், நாட்டுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “திட்டங்களை வகுத்த அதிகாரிகள் பலபேர் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட பல நல்ல திட்டங்களை வகுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube