தமிழகத்தில் இன்று புதிதாக 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் தொடர்ந்து 13-வது நாளாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 945 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,62,374 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,84,85,460 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 71,888 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 71,696 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,20,916 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 549 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,41,423 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 396 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 3-ம் பாலினத்தவர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் 12,564 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 576 பேர் இன்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 999 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 811 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 395 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,39,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube