கேரளாவில் புதிதாக 1,970 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 15 பேர் பலி

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று புதிதாக 1,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,93,994 ஆக உயர்ந்துள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,422 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,884 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,63,444 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 26,127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Google+ Linkedin Youtube