விஜய்யின் 65-வது பட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெறுகிறது

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்றும், அவருக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசி உள்ளனர் என்றும், சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. பூஜா ஹெக்டே கூறும்போது, ‘விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன்’ என்றார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை ரஷியாவில் நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக இயக்குனர் நெல்சன் ரஷியா சென்று படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்து வருகிறார். ரஷியாவில் இருக்கும் புகைப்படங்களையும் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு பின்னர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

Google+ Linkedin Youtube