திருச்செந்தூர் மாசித்திருவிழா சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சார்த்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10-ம் திருநாளான நாளை (26-ம்தேதி) காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

Google+ Linkedin Youtube