திருநெல்வேலி - தென்காசி இடையே நான்கு வழிச்சாலைப் பணி 18 மாதங்களில் முடியும்

தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை முதல் தென்காசி வரை 45 கி.மீ. தூரத்துக்கு நான்குவழிச் சாலை அமைக்க ரூ. 412 கோடி ஒதுக்கப்பட்டது. இத் திட்டம் 2018 ஜூலையில் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடைய வேண்டும். ஆனால், தற்போது வரை நான்குவழிச் சாலைப் பணி முடிவடையவில்லை. நிலம் கையகப்படுத்தப்படும் பணி முடிவடைந்துள்ளது.

சாலையின் இரு பக்கங் களிலும் வளர்ந்திருந்த சுமார் 1,400 மரங்களை அகற்றி உள்ளனர். இருப்பினும் நான்கு வழிச்சாலைப் பணிகளைத் தொடங்கவில்லை.

நெல்லை- தென்காசி சாலையில் ஏராளமான அபாய கரமான வளைவுகள் உள்ளன. எனவே, நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலைச் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, ஹேமலதா அமர்வில் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இ.பினேகாஸ் வாதிட்டார். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், நெல்லை- தென்காசி நான்கு வழி்ச்சாலைப்பணி 18 மாதங்களில் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்து வழக்கை முடித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Google+ Linkedin Youtube