பாம்பாட்டத்திற்கு தயாரான மல்லிகா ஷெராவத்

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக ‘பாம்பாட்டம்’ படத்தை தயாரித்து வருகிறார்.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

மல்லிகா ஷெராவத் - ஜீவன்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். 

இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Google+ Linkedin Youtube