ஒரே வாரத்தில் பெரும் வசூல்! இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை! மற்ற படங்களின் சாதனை முறியடிப்பு!

சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் படம் நன்கு ஓடி வசூல் பெற்றாலே பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி என சொல்லப்படுகிறது.

பல போட்டிகள், இக்கட்டான சூழ்நிலைகள், நடிகர்களின் படங்களுக்கிடையில் நம்ம படம் எடுபடுமா? என்ற நிலையிலும் குறைந்த பட்ஜெட் படங்களும், புதுமுகங்களின் படங்களும் வெற்றி பெறுவது ஆச்சர்யமும், பாராட்டும் நிறைந்த விசயமே.

தெலுங்கு சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது உப்பெனா..

வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி என பலர் இப்படத்தில் நடிக்க புச்சி பாபு சனா இயக்கியுள்ளார்.

படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் ரூ 70 கோடி வசூலித்துள்ளதாம். புதுமுகங்கள் நடிப்பில் வந்த படங்கள் இதுவரை இப்படி ஒரு வசூலை செய்ததில்லையாம். தயாரிப்பு நிறுவனம் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

Google+ Linkedin Youtube