மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் அரசை கவிழ்த்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரின் பல பகுதிகளில் மக்கள் நேற்று கூட்டமாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க மியான்மர் முழுதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'மியான்மரில் மனித உரிமைகள் மீறப்படலாம்' என ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.


இது பற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 'மியான்மரில் இதற்கு முன் ராணுவ ஆட்சி நடந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; பலர் காணாமல் போயினர். இப்போது மீண்டும் அதுபோல் நடக்கலாம் என அஞ்சுகிறோம்' என தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube