இந்தியாவில் புது ரூபத்தில் பப்ஜி: எப்படி வருகிறது? எப்போது வரும்?

PUBG Mobile India planning to come back in India Tamil News : பப்ஜி மொபைல் உலகெங்கிலும் குறிப்பாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் கேம்களில் ஒன்று. இது செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது, பொதுமக்களிடமிருந்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஆனால் இந்திய அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. இப்போது பப்ஜி கார்ப்பரேஷன் இந்த விளையாட்டு விரைவில் இந்தியப் பதிப்பில் நாட்டில் களமிறங்கும் என அறிவித்துள்ளது. என்றாலும் இது இந்திய அரசு அனுமதி அளிப்பதைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி மொபைல் மீண்டும் இந்தியா வருகைப் பற்றிய அனைத்தையும் இங்கே பார்ப்போம்.

பப்ஜி மொபைல்: இந்தியா தடை

பப்ஜி மொபைல் இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் கேம்களில் ஒன்று. இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பயனர் தளத்தைக் கொண்டிருந்தது. பப்ஜியின் பிரதான பதிப்பு மற்றும் அதன் lite பதிப்பு இரண்டுமே நாட்டில் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளன. ஆனால், செப்டம்பர் 2-ம் தேதி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் இந்தியாவில் இந்த விளையாட்டை இந்திய அரசு தடை செய்தது.

இந்திய அரசாங்கம் வழங்கிய இந்தத் தடைக்குக் காரணம், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பாரபட்சமற்ற செயல்களில் இந்த செயலி ஈடுபட்டுள்ளது என்பதுதான். அதனைத் தொடர்ந்து, இந்த விளையாட்டு கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால், இந்தியச் சேவையகங்கள் ஆன்லைனில் விடப்பட்டதால் பயன்பாட்டை அணுகக்கூடிய பிளேயர்கள் விளையாட முடிந்தது. சமீபத்தில் அதுவும் தடை செய்யப்பட்டன.

இதற்கிடையில், பப்ஜி கார்ப்பரேஷன், டென்சென்ட் கேம்களிலிருந்து இந்த விளையாட்டுக்கான இந்திய விநியோக உரிமையை ரத்து செய்து, அதை சுயாதீனமாக விநியோகிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இந்த விளையாட்டு மீண்டும் செயல்படுத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் மீண்டும் வருவதற்கு ரிலையன்ஸ் ஜியோ அல்லது ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவை எதுவும் பலனளிக்கவில்லை மற்றும் சில நாட்களுக்கு முன்பு பப்ஜி கார்ப்பரேஷன் புதிய பரிமாணத்தில் மீண்டும் நாட்டிற்கு வருவதாக அறிவித்தது.

பப்ஜி மொபைல் இந்தியா

பப்ஜி கார்ப்பரேஷன் சமீபத்தில் அதன் பிரபலமான மொபைல் கேம்மான பப்ஜி மொபைல் சில மாற்றங்களுடன் இந்தியாவுக்கு மீண்டும் பதிவிறக்க உள்ளதாக அறிவித்தது. இந்த விளையாட்டு இனி பப்ஜி மொபைல் இந்தியா என்று அழைக்கப்படும். மேலும், இது கொரிய மற்றும் சீன பதிப்பைப் போலவே உலகளாவிய பதிப்பிலிருந்து தனித்தனியாக இருக்கும்.

குறிப்பாக இந்தியச் சந்தையில் செய்யப்பட்ட மாற்றங்கள், ஓர் மெய்நிகர் உருவகப்படுத்துதல் பயிற்சி மைதான அமைப்பை உள்ளடக்கியது. எல்லா கதாபாத்திரங்களும் விளையாட்டின் தொடக்கத்திலிருந்தே முழுமையாக உடையணிந்து, சிவப்பு நிறத்திற்குப் பதிலாக இரத்தம் பச்சை நிறமாக இருக்கும். இளம் வீரர்களுக்கு ஆரோக்கியமான விளையாட்டுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக விளையாட்டு நேரத்திலும் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்கும்.

இந்த மாற்றங்களைத் தவிர, ஓர் தனிப்பட்ட இந்தியத் துணை நிறுவனத்தை அமைப்பதாக பப்ஜி கார்ப்பரேஷன் கூறியுள்ளது.

இதனால் வீரர்களுடனான தொடர்பை அதிகரிக்கவும், அவர்களுக்கு உள்ளூர் சேவைகளை வழங்கவும் உதவுகிறது. அதன் இந்தியத் துணை நிறுவனத்தில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எதிர்பார்க்கிறது. அவர்கள் வணிகம், விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறுவார்கள்.

பப்ஜி கார்ப்பரேஷனின் இந்தியத் திட்டங்கள் அனைத்திற்கும் நிதியளிப்பதற்காக, கிராப்டன் இன்க் நிறுவனம், 100 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பணம் இந்திய அலுவலகங்களை இயக்கவும், இந்தியா-பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் போட்டிகளை நடத்தவும் மற்றும் பெரிய தயாரிப்புகளை உருவாக்கவும் உதவும். இந்திய வீரர்களின் டேட்டா தனியுரிமை மற்றும் பாதுகாப்பே அதன் முன்னுரிமை என்று பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியப் பயனர்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வைத்திருக்கும் சேமிப்பக அமைப்புகளில், சீரான ஆடிட் மற்றும் சரிபார்ப்புகளை நடத்தும்.

பப்ஜி மொபைல் இந்தியா: இது எப்போது தொடங்கப்படும்?

பப்ஜி மொபைல் இந்தியாவுக்கான சரியான வெளியீட்டுத் தேதியை தற்போதுவரை பப்ஜி கார்ப்பரேஷன் அறிவிக்கவில்லை. விரைவில் அனைவர்க்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த விளையாட்டை அனுமதிக்க அரசாங்கத்திடம் இருந்து எந்த உறுதி அறிக்கையும் இல்லை.

பப்ஜி மொபைல் இந்தியா: டீஸர் வீடியோ மற்றும் வலைத்தளம்

பப்ஜி மொபைல் இந்தியாவை சந்தைப்படுத்த, பப்ஜி கார்ப்பரேஷன் சமீபத்தில் பல வீடியோ டீஸர்களைப் பதிவேற்றியது. இந்த வீடியோக்களில் டைனமோ, ஜொனாதன் மற்றும் பல பிரபலமான இந்திய பப்ஜி மொபைல் இன்ஃப்ளூயென்சர்ஸ் உள்ளனர். இது, விளையாட்டுக்காக ஒரு பிரத்யேக தளத்தையும் அமைத்துள்ளது.

பப்ஜி மொபைல் லைட்: இது மீண்டும் வருமா?

தற்போது பப்ஜி மொபைலை மட்டுமே இந்தியாவுக்குக் கொண்டு வருவதாக பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. விளையாட்டின் லைட் பதிப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. முதலில் தனது பப்ஜி மொபைல் இந்தியா விளையாட்டைக் கொண்டு வந்து சோதித்து, அதன்பிறகு பப்ஜி மொபைல் இந்தியா லைட் விளையாட்டைப் பொருத்தமான மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பப்ஜி மொபைல்: பிற நாடுகளில் தடை

டென்சென்ட் கேம்ஸின் சொந்த நாடான சீனா உட்பட பல நாடுகளில் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டைத் தடை செய்த பிற நாடுகளில் ஜோர்டான், நேபாளம், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகியவையும் அடங்கும். இந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில், பப்ஜி மொபைல் தொடர்ந்து இயங்குவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளது. உதாரணத்திற்கு, சீனாவில் இந்த விளையாட்டு பெரிதும் மாற்றியமைக்கப்பட்டு அமைதிக்கான விளையாட்டு எனப் பெயரிடப்பட்டது.

Google+ Linkedin Youtube