இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதார அமைப்பு கூறும்போது, “ இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு 36, 061 பேர் இத்தாலியில் பலியாகினர். 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட அவசர நிலையை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இத்தாலி அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தாலியில் மார்ச் மாதத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த கரோனா தாக்கம் அதன்பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை இத்தாலி அரசு எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

Google+ Linkedin Youtube