தனுஷ் ஜோடியாக ஹன்சிகா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் முடிந்துள்ளது. கொரோனாவால் திரையரங்குகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஜெகமே தந்திரம் படத்தை இணைய தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கும் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011-ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

Google+ Linkedin Youtube