கிருமி நீக்கம் செய்ய நவீன கருவி

கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சமூக மருத்துவத்துறை மாணவராக இருப்பவர் பன்னீர் செல்வம். இவர், பெரிய அளவிலான தெர்மாகோல், அலுமினிய பாயில் பேப்பர் பயன்படுத்தி, அதில் புறஊதா கதிர்களை கொண்டு பெட்டி ஒன்றை வடிவமைத்தார். பயன்படுத்திய என்.95 மாஸ்க், ஸ்டெதஸ்கோப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை, கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை முதலில் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பயன்படுத்துவதற்காக நேற்று வழங்கினார்.

பன்னீர்செல்வம் கூறுகையில், ''என் 95., முக கவசங்கள் சற்று விலையுர்ந்தவை. நான் தயாரித்துள்ள இந்த புற ஊதாக்கதிர் பெட்டியில், அந்த முகக்கவசங்களில் ஒட்டியிருக்கும் கிருமிகளை நீக்க முடியும். அதுமட்டுமின்றி, மொபைல், வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பெட்டியில் வைத்து கிருமி நீக்கம் செய்யலாம். இதற்கு வெறும், ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதன்முலம், ஒரு என்.95 முக கவசத்தை, ஐந்து முறை வரையிலும் பயன்படுத்தலாம்,'' என்றார்.

Google+ Linkedin Youtube