ஹூவாய் நிறுவனம் அதன் 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் தலைசிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்க்கு பெயர்போன ஹூவாய் நிறுவனம் அதன் பெஸ்ட் கேமரா போன்களின் தொகுப்பான P40 சீரிஸ்-இன் கீழ் ஹூவாய் பி40 லைட் 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூவாய் பி40 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.32,762 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற வண்ணங்களில் வருகிறது.அம்சங்களை பொறுத்தவரை, ஹூவாய் பி 40 லைட் 5 ஜி ஆனது 6.5 இன்ச் அளவிலான புல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவை (2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 57 எம்.பி 6 ஜி.பீ.யுடன் சமீபத்திய ஹைசிலிகான் க்ரின் 820 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, ஹூவாய் பி 40 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல்கள் பிரதான கேமரா + 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார் என்கிற க்வாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பிற்குள் ஒரு 16 மெகாபிக்சல் அளவிலானசெல்பீ கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது. இதில் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. உடன் 40W சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்Android 10 அடிப்படையிலான EMUI 10.1 கொண்டு இயங்குகிறது. இதற்கு Google ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, இது ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5 டூயல் பேண்ட்), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் போன்றவைகளை ஆதரிக்கிறது. அளவீட்டில் இது 162.31 x 75.0 x 8.5 மிமீ மற்றும் 189 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஹூவாய் பி 40 லைட் 5 ஜி என்பது ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும், இது சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இப்போது ஐரோப்பாவில் முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது, இதன் அதிகாரப்பூர்வ விற்பனை மே 29 முதல் தொடங்கும்.

Google+ Linkedin Youtube