யூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம்

யூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming music service coming soon). YouTube இன் "இசைவெள்ளம்" - சேவை அடுத்த வாரம் மே 22 அன்று தொடங்குகிறது. இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் இலட்சக் கணக்கான இசை தடங்கள் மற்றும் வீடியோக்களை YouTube Music இல் கேட்டு, கண்டு மகிழலாம். 

ஆல்பங்கள் முழுதுமாக, கவர்கள், ரீமிக்ஸ், லைவ் பதிப்புகள் மற்றும் கலைஞர் வானொலி நிலையங்கள் ஆகியவற்றை நீங்கள் யூடியூப் மியூசிக் (YouTube Music) இன் புதிய மொபைல் மற்றும் டெஸ்க்டாப் செயலிகளில் (Mobile / Desktop App) இரசிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. புது செயலியில் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்குவதன் மூலம், முகப்புத் திரையில் நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள் மற்றும் உங்கள் இசனைக்கேற்ற / தெரிவுசெய்யப் பட்ட பாடல் பட்டியல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பிளேலிஸ்ட்களையும் (Playlists) பரிந்துரைக்கின்றது. 

Google Play மியூசிக்கை, YouTube சார்ந்த சேவையுடன் மாற்றுவதற்காகவே கூஃகிள் (Google) இந்த முயற்சியினை எடுத்துள்ளது. புதிய மியூசிக் சேவையானது YouTube ஐ Spotify, ஆப்பிள் மியூசிக் (Apple Music), பண்டோரா, டீசர் (Deezer) மற்றும் அதன் சொந்த கூகிள் மியூசிக் இசை (Google Play Music) ஆகியவற்றிற்கு நிகர் போட்டியாக அமைக்கக்கூடும்.

Google+ Linkedin Youtube