மெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்

#Mersal#Vijay#Vijay Fans

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வரவுள்ளது. படக்குழுவினர்கள் சென்ஸார், டைட்டில் பிரச்சனை என பிஸியாகவே உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பேனர், போஸ்ட்டர் என தமிழகம் முழுவதும் கலக்கி வருகின்றனர், விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் நல்ல ரசிகர்கள் பலம் உள்ளது.

அங்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ, கட்-அவுட், போஸ்ட்டர் என ரெடி செய்து வருகின்றனர், தற்போது வெளிவந்துள்ள செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

விஜய்க்கு இலங்கையிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர், இவை அனைவரும் அறிந்தது தான், இலங்கையில் ஒரு பகுதியில் விஜய்க்கு பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

அந்த கட்-அவுட் நேற்று ஒரு சிலரால் உடைக்கப்பட்டுள்ளது, அருகில் இருந்த பேனரும் கிழிப்பட்ட நிலையில் இருக்க, இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

Google+LinkedinYoutube