மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஆட்டோ மீது லாரி மோதல்; 7 பேர் பலி

நாசிக்,

மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் ஷெம்லி கிராமம் அருகே மாலேகான்-சாத்னா சாலையில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதன்மீது லாரி ஒன்று இன்று காலை மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்கள் சாத்னா நகரில் நடைபெறும் திருவிழா ஒன்றில் பொம்மைகள் மற்றும் பிற பொருட்களை விற்பதற்காக சென்று கொண்டிருந்துள்ளனர்.  அவர்களது உடல்கள் சாத்னா கிராம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Google+ Linkedin Youtube