Category Archives: விளையாட்டு செய்திகள்

ஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்

அடிலெய்ட் டெஸ்ட் சத நாயகன் செடேஷ்வர் புஜாரா ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 4ம் இடம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

‘எல்லோரும் புஜாரா ஆகமுடியாது’: ‘ஸ்லெட்ஜிங்கில்’ ஆஸி.யை மிஞ்சிய ரிஷப் பந்த்

அடிலெய்டில் நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியது தற்போது வெளியாகியுள்ளது.

'சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்': தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்

வீரேந்திர சேவாக், சச்சின், கம்பீர் ஆகிய 3 பேரும் ஒன்றாக விளையாட முடியாது, நானும் விளையாடமாட்டேன் என்று தோனி கூறியவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்று கவுதம் கம்பீர் தோனியை விமர்சித்துள்ளார்.

ஆமாம் நான் நிறைய விரோதிகளைச் சம்பாதித்தேன் ஆனாலும் நிம்மதியாகவே உறங்கினேன்: ஓய்வு பெறும் கம்பீர் மனம் திறப்பு

கவுதம் கம்பீர் என்றாலே அவர் பெயர் குறிப்பிடுவது போல் கம்பீரமானவர்தான், மூர்த்தி சிறிதுதான் ஆனால் எண்ணத்தில், அணுகுமுறையில் கம்பீரமானவர், அமைப்புக்கு அஞ்சாதவர், தன் கருத்துகளை பட் பட்டென்று முகத்தில் அடித்தார் போல் கூறுபவர்.

ரஞ்சியில் தமிழகம் திணறல்

ரஞ்சி கோப்பையில் கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் நாளில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

தீவிரவாத குற்றச்சாட்டு: பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரரின் சகோதரர் திடீர் கைது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர், தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார்.

அடிலெய்ட் ஆடுகளம் எப்படி?, இந்தியாவை அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது?- ஓர் அலசல்

அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடிலெய்டின் ஆடுகளம் எப்படி இருக்கும், புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது என்பதைக் காணலாம்.

'நான் உயிரோடுதான் இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கலம்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன்மெக்கலம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்று பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம் அளித்துள்ளார்.

‘‘அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னை அழிக்க துடிக்கிறார்கள்’’ - மிதாலி ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிகாரத்தில் இருக்கும் சிலர் தன்னை அழிக்க முயலுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற மகளிர் உலகக்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹனா ஒகோட்டாவை 5-0 என்று பிளாங்க் செய்த மேரி கோம் உலக மகளிர் குத்து ச் சண்டையில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விளையாட்டு என்பது ‘பேங்க் பேலன்ஸ்’ பற்றியதல்ல: சச்சின் டெண்டுல்கர் அறிவுரை

பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தையும் இணைக்க வேண்டும் என்று பேசி வரும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ‘உலக குழந்தைகள் தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் டெல்லியில் மாணவர்களுடனான குழு விவாதம் ஒன்றில் தெரிவித்தார்.

2019 ஐபிஎல்: ஒவ்வொரு அணியிலும் கழற்றிவிடப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்?- இதோ பட்டியல்

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

பவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன் முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் தனது உலக சாதனை இரட்டைச் சதத்துக்குப் பிறகு மைதானத்தில் மெக்கா இருக்கும் திசையை நோக்கி மண்டியிட்டு தொழுதார்.

மிட்செல் ஸ்டார்க்கின் வாழ்நாளின் மோசமான ஓவர்: கடைசி 15 ஓவர்களில் ஆஸ்திரேலியா- பெங்களூரு போட்டியை விட மோசம்

ஹோபார்ட்டில் நடைபெற்ற மூன்றாவதும், தொடரின் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 16வது ஓவரில் 55/3 என்று சரிவடைந்த தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு டுபிளெசிஸ், மில்லர் சதங்களுடன் சாதனை 252 ரன் கூட்டணியுடன் வெற்றிக்கான 320 ரன்களை எட்டியதால் தொடரை 2-1 என்று...

ரோஹித் மட்டும்தான் சரியாக விளையாடவில்லையா மற்றவர்கள்? - தேர்வுக்குழுவை விளாசிய சேவாக்

டெஸ்ட் போட்டித் தொடர்களில் ரோஹித் சர்மா மட்டும் சரியாக விளையாடவில்லை என்று தேர்வுக்குழுவினர் அவரை நீக்கினார்கள், அப்படியென்றால் மற்ற வீரர்கள் நன்றாக விளையாடினார்களா என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தேர்வுக்குழுவை கடுமையாக விளாசியுள்ளார்.

360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; ‘டெட்பால்’ அறிவித்த நடுவர்: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது? 360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’

கொல்கத்தாவில் நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் சிவா சிங் 360 கோணத்தில் சுழன்று வித்தியாசமாகப் பந்துவீசியதால், அவரின் பந்துவீச்சை ‘டெட் பால்’ என்று நடுவர் அறிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே எழுச்சி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அனைவரின் எதிர்பார்ப்பையும் முறியடிக்கும் விதமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.