Category Archives: இந்தியா செய்திகள்

'நானும் காவலாளிதான் கோஷத்தை பயன்படுத்தாதீர்கள்': பிரதமர் மோடியை கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமையும் என்று பாஜஎம்.பி. சத்ருஹன் சின்ஹா பிரதமர் மோடியை கிண்டலுடன் விமர்சித்துள்ளார்

'தாமரை' மலர்கிறது; தடுக்கும் மம்தா: வாக்குகளை இழக்கும் காங்., இடதுசாரிகள்- மே.வங்கம் ஓர் அலசல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தேசத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர்.

தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு 'படுமோசம்': கேரளா, ராஜஸ்தான், குஜராத் எம்.பி.க்கள் 'சூப்பர்': ஆய்வில் தகவல்

16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்த மக்கள், தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்கவில்லை, மிகமோசம் என்று வாக்களித்துள்ளனர்.

கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"தான் பிடிபட்டதும், தேசத்தையே காவலாளி ஆக்கிவிட்டார் மோடி": ராகுல் காந்தி விளாசல்

பிரதமர் மோடி தான் ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டதும், தேசத்தையே காவலாளியாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

பெண் ராணுவ அதிகாரி பெங்களூருவில் பலாத்காரம்

பெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

மிசோரமில் சட்ட விரோதமாக குடியேறி 16 கிராமத்தை உருவாக்கிய வங்கதேசத்தினர்

மிசோரம் மாநிலத்தில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி 16 கிராமங்களை அமைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

அனில் அம்பானி, நிரவ் மோடி ரகசியமாகப் பேசினாலே மோடி காதில் விழுகிறது... விவசாயிகள் சத்தமாகக் கூறினாலும் கேட்பதில்லை: ராகுல் காந்தி சாடல்

சாமானிய மக்களின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்பதில்லை, அனில் அம்பானி, நிரவ் மோடி ஆகியோரின் பேச்சும், குரலும்தான் அவருக்கு கேட்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

நாட்டுக்குள் ஓர் உலகம்: தமிழ்நாடும் துருக்கியும்... உ.பி.யும் பிரேசிலும்- தேர்தல் சுவாரஸ்யத் தகவல்கள்

நாட்டுக்குள் ஓர் உலகம்: தமிழ்நாடும் துருக்கியும்... உ.பி.யும் பிரேசிலும்- தேர்தல் சுவாரஸ்யத் தகவல்கள்

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பொருளாதாரரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தத

ராஜஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: குஜராத், பஞ்சாப், காஷ்மீர் எல்லைகளிலும் உஷார் நிலை

ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை எல்லை பாதுகாப் புப் படை வீரர்கள் நேற்று சுட்டு வீழ்த்தினர்.

கடந்த 4 ஆண்டுகளில் சிறு,குறு தொழில்களில் 3.32 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவானது : சிஐஐ ஆய்வில் தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளது என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்படவில்லை: அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்படவில்லை, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் அசல் ஆவணங்களின் போட்டோ காப்பிகளையே பயன்படுத்தினர்

மக்களவைத் தேர்தல் தேதி: ஏற்பாடுகள் முடிந்தது; ஓரிரு நாட்களில் அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலை விபத்து என விமர்சித்த உ.பி. அமைச்சர்: வீடியோவை ரீட்வீட் செய்த திக்விஜய் சிங்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் விபத்து என விமர்சித்து உ.பி. அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக். பற்றி நினைப்பு- கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறிய பிரதமர் மோடி: குழப்பத்தில் பாஜக தொண்டர்கள்

குஜராத்தின் ஜாம்நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சி நகரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை மறந்தவாறு குறிப்பிட்டார்..

புல்வாமா வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறார் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பிரபலப் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தாய் நாடு திரும்பினார் அபிநந்தன்: வாகா எல்லையில் ஒப்படைப்பு - எல்லையில் கொண்டாட்டம்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா வசம் ஒப்படைத்தனர். ஏராளமான ன மக்கள் எல்லையில் திரண்டு அபிநந்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

காஷ்மீர்: கல்லெறிபவர்கள் சுதந்திரமாக விடப்படுகின்றனர், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ஆயுதப்படையினர் மீது வழக்கா?

போலீஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது ஆனால் தற்காப்பு உத்தியைக் கையாளும் ஆயுதப்படையினர் மீது வழக்கு தொடர்வதா என்ற கேள்வி எழுப்பிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.